Thursday, July 21, 2011
சில சர்வதேச அமைப்புக்கள் புலிகளின் மனோ நிலையை பிரதிபலிப்பதாக சிரேஸ்ட அமைச்சர் டியூ குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் மெய்யான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை என அண்மையில் சர்வதேச அனர்த்தக் குழு வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் நிலைப்பாடுகளையே இந்த அமைப்புக்கள் பிரதிபலிக்க முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மை நிலைமைகளை கருத்திற் கொள்ளாது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்கள் திருப்தியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலம், ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை மேலும் நிரூபணமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment