Thursday, July 21, 2011

அப்பாவி தமிழர்களின் பணத்தை சூறையாடி மகளை புதுடில்லிக்கு அனுப்பி வைத்திய கல்வியைப் புகட்டும் (புலி)கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் கிளிநொச்சியை எப்படி காக்கப்போகிறார்?

Thursday, July 21, 2011
அப்பாவி தமிழர்களின் பணத்தை சூறையாடி மகளை புதுடில்லிக்கு அனுப்பி வைத்திய கல்வியைப் புகட்டும் (புலி)கூட்டமைப்பின் சுரேஷ் எவ்விதம் கிளிநொச்சியை காப்பாற்ற முடியும்?

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் (புலி கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று கிளிநொச்சியை கிளிநொச்சியாக இருக்கவிடுமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்துகின்றார்.

ஆனால் இவர் அப்பாவி சிறார்களையும் இளைஞர்களையும் கல்வியோ அன்றாட தொழில்களையோ செய்யவிடாது வலுக்கட்டாயமாகப் பிடித்து இராணுவத்தில் இணைத்து அவர்களை அவலத்துக்கும் அழிவுக்கும் உள்ளாக்கினார் என்று பொதுமக்களின் நண்பன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவர் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின் றார்.

சுரேஷின் கட்டாய ஆட்சேர்ப்பால் பல இளைஞர்கள் முடமாகவும், முட்டாள்களாவும் இன்றும் கிளிநொச்சியில் வலம்வருகின்றனர். அந்தகாலகட்டத்தில் இத்தகைய துரோக செயல்கள் மூலம் பலகோடி ரூபாய்களை இவர் தன்வசமாக்கினார்.

தனது பாராளுமன்ற ஆசனத்தைப் பாது காத்துக் கொண்டார் என்றும் இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விதம் சூறையாடிய பலகோடி ரூபா பணத்தைக் கொண்டு கொழும்பில் ஆடம்பரமான மாளிகையையும் இவர் வாங்கியுள்ளார். இலங்கையில் மருத்துவ கல்லூரியில் அனுமதிபெறமுடியாத தனது மகளுக்கு பலகோடி ரூபா செலவில் இந்தியத் தலைநகரமான டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவர் இத்தனை தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் முடமாக்கித் தேடிய சொத்தில் அகதியாக வவுனியா வந்த மக்களின் தாகம் தீர்க்க ஒரு தண்ணீர் போத்தலையாவது வாங்கிக்கொடுத்ததுண்டா? அல்லது அந்த ஞாபகமாவது இவருக்கு இருந்ததா என்றும் இக்கடிதத்தில் கேள்வியெழுப்ப ப்பட்டுள்ளது.

பல அரசியல் கோடீஸ்வரர்கள் பிறப்பிலேயே இருக்கின்றனர். சொந்த ஊரைவிட்டு வாழ வழியின்றி வெளியேறியவரின் மகன் கோடீஸ்வரன் ஆகியது தமிழினத்துக்கு கொள்ளிவைத்து சேர்த்த பணத்தின் மூலம் என்பது வெள்ளிடை மலையாக விளங்குகிறது.

இவ்வாறான ஏழைபிள்ளைகள் காலில்லாது, கையில்லாது கல்வியைத் தொடர தமிழனை சூறையாடிப்பெற்ற பணத்தில் தன் மகளை டெல்லிக்கு அனுப்பு கல்வி கற்பிப்பவருக்கு எவ்விதம் கிளிநொச்சி மக்களின் அவலநிலை புரியப்போகிறது என்றும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களை அமைதியாக வாழவிடுங்கள்.

துரோகிகளின் கதைகளை பொருட்படுத்தாது அபிவிருத்தியில் கிளிநொச்சியை அம்பாறையாக மாற்றுங்கள். எமக்குத்தேவை மகிழ்ச்சியான இயல்புவாழ்வேயன்றி புதுமாத்தளன் அல்ல என்றும் இக்கடிதத்தை எழுதியவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment