Thursday, July 21, 2011
படுகொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். காத்தான்குடி பிரதேசத்தில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
14 வயது சிறுவன் ஒருவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த சிறுவனை 16 வயதுடைய சிறுவன் படுகொலை செய்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதலில் கடுமையான காயமடைந்த சிறுவன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment