Thursday, July 21, 2011

ஈரான் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் உளவு பார்த்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!

Thursday, July 21, 2011
ஈரான் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்து எங்களது செயற்பாடுகளை உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் குவாம் மாகாணத்தில் உள்ள போர்டோ அணு செறிவாக்கும் ஆலைகளை விமானம் உளவு பார்க்கும் போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏக்கு அவ்விமானம் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தாக அந்த அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

No comments:

Post a Comment