Thursday, July 21, 2011

வாக்குகளை எண்ண வெளிமாவட்ட அதிகாரிகளை அனுமதிக்க கூடாது-தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு வேண்டுகோள்!

Thursday, July 21, 2011
வாக்குகளை எண்ண வெளிமாவட்ட அதிகாரிகளை அனுமதிக்க கூடாது-தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு வேண்டுகோள்!

வாக்கு என்னும் பணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் 130 அதிகாரிகளை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தொடரிலேயே தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பினால் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெற உள்ள உள்@ராட்சி சபை தேர்தலுக்கு வாக்கு எண்ணும் பணிகளுக்காக, அங்கு வருகைதரும் வெளிமாவட்ட அதிகாரிகளை நிறுத்த வேண்டும். அதேவேளை தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை இந்தப் பணியில் ஈடுபடுத்தவும் வேண்டும்.

மேலும் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக தற்காலிக அடையாள அட்டை வழங்கும் வழங்கப்படுகின்றது. இப்பணியானது இடைநிறுத்தப்படக் கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment