Thursday, July 21, 2011
மீனம்பாக்கம்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சென்னையில் இருந்து இன்று தனி விமானம் மூலம் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அரசு முறைப் பயணமாக கடந்த 18ம் தேதி இந்தியா வந்தார். அவருடன் 67 பேர் கொண்ட குழுவும் வந்தது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோரை ஹிலாரி சந்தித்து பேசினார். அங்கிருந்து நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை வந்தார். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஹலாரி பார்வையிட்டு, மாணவர்களிடையே உரையாற்றினார். பின்னர், சென்னை கோட்டையில் முதல¢வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். பிறகு திருவான்மியூரில் உள்ள கலாசேத்ராவில் இந்திய பண்பாடு மற்றும் கிராமிய கலாசார கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு செல்வதற்காக இன்று காலை 10.30க்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், காஞ்சிபுரம் கலெக்டர் சிவசண்முகராஜா, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கரண் சின்கா, தமிழக உளவுப்பிரிவு டிஐஜி சத்யமூர்த்தி ஆகியோர் ஹிலாரியை வழியனுப்பி வைத்தனர்.

No comments:
Post a Comment