Thursday, July 21, 2011

வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி!

Thursday, July 21, 2011
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலுள்ள மக்களுக்கு போக்கவரத்து காரணமாக தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை எற்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக சுதந்திரமானதும் நீதியுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கின்றார்.

தேர்தலன்று கிளிநொச்சி, யாழ்ப்பானம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளின் மக்களின் வாக்களிப்பு உரிமையை பாதுகாப்பது சவாலாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிடடார்.

சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்களுக்கு, வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் முறையான அடிப்படை வசதிகள் காணப்படுகின்ற போதிலும் போக்கவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருப்பதால் தேர்தல் தினத்தனறு அதிக தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றும் கீர்த்தி தென்னகோன் கூறினார்.

இதேவேளை, வடபகுதியின் போக்குவரத்து வசதிகள் குறித்து அதிகளவிலான அமைப்புக்களினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய இணைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிச்சந்திர குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கவனம்செலுத்தியதாகவும் ரசாங்க ஹரிச்சந்திர தெரிவித்தார்.

இதற்கமைய தேர்தல் தினத்தன்று குறித்த பகுதிகளின் வாக்காளர்களின் நலன் கருதி அரச போக்குவரத்து சேவை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை என்பன போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ளும் என ரசாங்க ஹரிச்சந்திர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment