Thursday, July 21, 2011
தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் சாவகச்சேரி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவருமான க. அருந்தவபாலன் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி அவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று தொடர்பாகவே தான் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்று அருந்தவபாலன் தெரிவித்தார்.
அருந்தவபாலனின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை விசாரித்தனர். நேற்று மாலை 4.30 மணிக்கு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர். 4.30 மணிக்கு அங்கு சென்ற அவரை தேர்தல் துண்டுப் பிரசுரம் ஒன்று தொடர்பாக விசாரித்த குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கொழும்பில் மேலதிக விசாரணை செய்யவேண்டியுள்ளதாகத் தெரிவித்து தமது வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
புத்தூர் வங்கிக் கொள்ளைச் சந்தேக நபர் கைது
புத்தூர் வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கிழக்கு மாகாணத்தின் மிக முக்கியமான அரசியல்வாதி ஒருவரின் மிக நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு கொழும்பு பஸ்ஸில் வைத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரதீபன் என்ற நபரே இந்த பாரிய வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தாடர்புடைய மேலும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment