Sunday, January 29, 2017

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் பதவியில் இருந்து சமந்தா பவர் நீக்கம்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் பதவியில் இருந்து நிஷா பிஸ்வால் நீக்கப்பட்டுள்ளார்.
 
நிஷா பிஸ்வால் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதியில் இருந்து இந்த பதவியை வகித்து வந்தார். இவருக்கு பதிலாக வில்லியம் ட்ரொட் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மேலும் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் பதவியில் இருந்து சமந்தா பவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
 
ஐக்கிய நாடுகளுக்கான 28 வது அமெரிக்க தூதுவரான சமந்தா பவர் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் அந்த பதவியை வகித்து வந்தார்.
 
சமந்தா பவருக்கு பதிலாக நீகி ஹெலி ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 2 பொலிஸார் கைது!

கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுக்கான  பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (29) இவர்கள் கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மட்டக்களப்பில் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது!

அதிக மழைக் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 
இவர்களில் 163 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் சன்முகநாதன் இன்பராஜா குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், பலத்த மழைக் காரணமாக மண்முனை வடக்கு பகுதியில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் மூன்று வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் சன்முகநாதன் இன்பராஜா தெரிவித்துள்ளார்.
 
மேலும் மழைக் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 800 இற்கும் மேறபட்டோர் பாதிக்கப்ப்டுள்ளனர்.
 
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தொடரும் கடும் மழைக் காரணமாக 72 பிரதான நீர்த்தேக்கங்களில் ஏழு நீர்தேக்கங்கள் வான்பாய்ந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சில நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வான் பாயும் நிலையை அண்மித்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
 
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் வான் பாயும் நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இதேவேளை குறித்த பகுதிகளிலுள்ள வயல்களும் நீரில் மூழ்கியுள்ளதாக நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
 
கிரான் – தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
 
இதன் காரணமாக பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை, திகிலிவட்டை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக இப்பிரதேசங்களுக்கான தரை வழிப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
 
இதேவேளை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Saturday, January 28, 2017

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்த ரணில் விக்ரமசிங்கவே நாட்டில் இருக்கும் போர் வீரன்: விக்ரமபாகு கருணாரட்ன!

 புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்து அந்த போரை நிறுத்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நாட்டில் இருக்கும் போர் வீரன் எனவும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்
ன தெரிவித்துள்ளார்.
 
புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்த வரலாற்று வீரன் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் மகாவம்சத்தில் எழுதப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே விக்ரமபாகு கருணராட்ன இதனை கூறியுள்ளார்.
 
 

எதற்காக ஆட்சியைப் பெற்றோம் என்பதை அறியாத இந்த ஆட்சியாளர்கள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே நாம் கடன் பெற்றோம். அதன் பிரதிபலன்களை பொதுமக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்த அரசாங்கம் பெற்ற கடனால் என்ன செய்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினா எழுப்பினார்.
 
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற புரட்சியின் ஆரம்பம் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
மோசடியான அரசியலமைப்பு ஒன்றை தயாரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அதற்கு எதிராக செயற்பட வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.
 
தற்போது நாடு பாரிய கடன் சுமையுடன் காணப்படுகின்றது.  அதற்காக தன்னை இந்த அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றது.
 
இந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் எதற்காக ஆட்சியைப் பொறுப்பேற்றோம் என்பதை அறியாதுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.