Tuesday, December 31, 2013

காலி லபுதுவயில் நிர்மாணிக்கப்பட்ட தென் மாகாண சபைக்கான நான்கு மாடிக்கட்டடத்தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!

Tuesday, December 31, 2013
இலங்கை::தென் மாகாண சபை மூலம் காலி லபுதுவயில் நிர்மாணிக்கப்பட்ட மாகாண சபை செயலகத்துக்கான நான்கு மாடி கட்டடத்தொகுதி நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
 
தக்ஷின பாய" என்ற பெயரிலான இந்த கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவில், அமைச்சர் குணரத்ன வீரகோன் இதென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டி கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரண, மனுஷ நாணயக்கார  உட்பட பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

வடக்கில் பிரிவினைவாதம் அரச விரோத செயற்பாடு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி: (புலி)கூட்டமைப்பின் சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து யோசனை!

Tuesday, December 31, 2013
இலங்கை::வடக்கில் பிரிவினைவாதம் அரச விரோத செயற்பாடு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி: (புலி)கூட்டமைப்பின் சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து யோசனை.colombo பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தொடர்ந்தும் பிரிவினைவாதம் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என  தெரிவித்துள்ளது.

எனவே, சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது குறித்து  கவனம் செலுத்தி வருகின்றது.

சிறீதரன் அண்மையில் இந்திய விஜயத்தை முடித்துக் கொணடு நாடு திரும்பிய போது, புலிகளின் ஆதரவு அமைப்பான மே 17 என்னும் பிரிவினைவாத அமைப்பின் உறுப்பினர் தமிழ் பிரபாகரன் என்பவரை நாட்டுக்குள் அழைத்துச் சென்றதாக  பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

(புலி)கூட்டமைப்பின் சிறீதரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் அவசியமாகின்றது.

(புலி)கூட்டமைப்பின் சிறீதரன் கிளிநொச்சி பாடசாலையொன்றின் அதிபராகக் கடயைமாற்றியுள்ளார்.  யாழ் புலிகளின் தலைவர் தீபன், சிறீதரனின் நெருங்கிய உறவினர்.

வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்த சிறீதரன் முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக colombo பத்திரிகை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவை சேர்ந்த (புலி)கூட்டமைப்பின்  
சிறீதரன் ஆசிரியராகவும் கிளிநொச்சி பாடசாலையின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் சந்தித்து பேசவுள்ளார்!

Tuesday, December 31, 2013
இலங்கை::இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ஜாஃப்ரி டாய்ட்ஜ்(Geoffrey Doidge), கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
 
இவர் நல்லூர் கந்தசாமி கோவில், வல்லிபுர ஆழ்வார் கோவில், மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். யாழ். கோட்டை, பொது நூலகம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் சென்றுள்ள தென்னாப்பிரிக்கத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் 
  தெரிவித்துள்ளார்
 
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வடக்கு மாகாண சபையின் நிர்வாகம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆகியன குறித்து தென்னாப்பிரிக்கத் தூதுவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு உதவ கியூபா உறுதி!

Tuesday, December 31, 2013
இலங்கை::ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வின்போது வரக்கூடிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான கியூபா உதவுவதாக உறுதியளித்துள்ளது.
 
எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக, கொள்கை அடிப்படையிலான குறிப்பான தீர்மானங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்பதனால், கியூபா அதை எதிர்க்கின்றது என கியூபா தூதுவர் இந்திரா லோப்பஸ் கூறினார்.
 
இப்படி ஒரு நாட்டைத் தனியாக தேர்ந்தெடுத்து தீர்மானம் கொண்டுவருவது ஒத்துழைப்பாகாது. இது அந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும். இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதாகும். இது ஒரு நாட்டின் மீது தேவையில்லாத அழுத்தத்தை பிரயோகிப்பதாகும். இது சர்வதேச சட்டத்தின் உண்மைப் பொருளாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்க முடியாத நிலையில் கியூபா உள்ளதென்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் ஆதரவு கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் யாழ் நல்லூரில்!

Tuesday, December 31, 2013
இலங்கை::கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன்
சுற்றுலா விசாவில் வந்துள்ள இவர் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது .
 
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர் நேற்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் . சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் .
 
மீள்குடியர்ந்த மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார் .அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார் .
 
இதேவேளை யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார் . இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது .
 
மனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையில் பிறந்த ராதிகா கனடாவின் ஸ்கார்பரே ரூஜ் ரிவர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
 
வடக்கில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த அவர் அங்குள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.
 
வடக்கில் அவர் திரட்டிய தகவல்கள் தொடர்பில் கனடா திரும்பிய பின்னர்

கனடிய  நாடாளுமன்றத்தில் வழங்குவார் என  தெரிவித்தார் (புலிகளின் ஆதரவு) கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன்.

414 புதிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்:-புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

Tuesday, December 31, 2013
சென்னை::14 புதிய பஸ்களை  முதல்வர்  ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:_

முதல்வர் ஜெயலலிதா நேற்று (30.12.2013) கோடநாடு முகாம் அலுவலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 333 புதிய பேருந்துகள், 81 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், என மொத்தம் 414 பேருந்துகளைத்  துவக்கி வைத்தார். மேலும், 5151 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளமாக 154 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 2 கோடியே 37 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் செரிவான போக்குவரத்து சேவையை பொது மக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சிற்றூர் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 10 லட்சம் பயணிகள் பயணிக்கின்ற அளவில் 20,634 தடப் பேருந்துகளை இயக்கி வருகின்றன. சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்ட சிற்றுந்து சேவைகள் பொது மக்களின் பெரும் வரவேற்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

பொது மக்களின் தேவைகளுக்கேற்ப முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 333 புதிய பேருந்துகள், 81 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், என மொத்தம் 414 பேருந்துகளை துவக்கி வைப்பதன் அடையாளமாக நேற்று கோடநாடு முகாம் அலுவலகத்தில், முதல்வர் ஜெயலலிதா 7 ஓட்டுநர்களுக்கு பேருந்துகளுக்கான சாவிகளை வழங்கி, கொடியசைத்து  துவக்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைமை மேம்பட்டு வருவதால் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் ஆகியவை தற்போது விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 247 பணியாளர்களுக்கு 5 கோடியே 52 லட்சம் ரூபாய் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை;

2011 மற்றும் 2012_ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற  4,321 பணியாளர்களுக்கு 140 கோடியே 68 லட்சம் ரூபாய் பணிக்கொடை;

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மே 2012 முதல் ஜூன் 2013 வரை ஓய்வு பெற்ற 583 ஓய்வூதியதாரர்களுக்கு  8 கோடியே 6 லட்சம் ரூபாய் விடுப்பு சம்பளம்;

என மொத்தம் 5151 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளமாக 154 கோடியே 26 லட்சம் ரூபாய் வழங்கும் அடையாளமாக 4 ஓய்வூதியதாரர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் அமைந்துள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தின், சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் கணிணி அறிவியல் பிரிவிற்கு 15,392 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் முதுகலை மாணவர்களுக்கென 12,917 சதுர அடி பரப்பளவில்  ஒரு கோடியே 21 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தங்கும் விடுதி கட்டடம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை முதன்மைச்  செயலாளர் பிராஞு கிஷோர் பிரசாத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

மின் இணைப்பு நுகர்வோருக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (சி.எப்எல்) வழங்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதாநேற்று தொடங்கிவைத்தார்

புதுப்பிக்கத் தக்க மற்றும் மாசற்ற எரிசக்தியினை ஊக்குவித்து அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை முதல்_அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.மொத்தத்தில் 519 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் திட்டங்களை முதல்_ அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மின் விநியோகத்தை துவக்கி வைத்தார்.