Saturday, December 1, 2012

ஐக்கிய இலங்கைக்குள் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்!

Saturday, December 01, 2012
இலங்கை::ஐக்கிய இலங்கைக்குள் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு எதிர்காலத்தில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு  உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உள்பட 138 நாடுகள் ஆதரவு : பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து ; ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேறியது!

Saturday, December 01, 2012
ஐ.நா.:பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கும் தீர்மானம் ஐ.நா.வில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா உள்பட 138 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக எல்லைகள் உள்பட பல பிரச்னைகள் நிலவுகின்றன. யாசர் அராபத்தின் கடும் போராட்டத்துக்கு பிறகு பாலஸ்தீனம் தனி நாடானது. எனினும் ஐ.நா.வால் தனி நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதையடுத்து தனி நாடு அந்தஸ்து வழங்க கோரி தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் ஐ.நா.வில் நேற்று கொண்டு வரப்பட்டது.

ஐ.நா.வில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உள்பட 138 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டன. இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றது. எனினும், உறுப்பு நாடுகள் பட்டியலில் சேராத ஐ.நா. கண்காணிப்பு நாடுகள் வரிசையில் பாலஸ்தீனம் இடம்பெறும். இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறுகையில், Ôவரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாலும், அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதாலும் தீர்மானம் நிறைவேறி உள்ளதுÕ என்றார்.

ஓட்டெடுப்புக்கு முன்பு பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் பேசுகையில், Ôஐ.நா.வில் தீர்மானம் நிறைவேறினால், பாலஸ்தீனத்துக்கு பிறந்த நாள் சர்ட்டிபிகேட் வழங்கியது போல் இருக்கும்Õ என்று தெரிவித்தார். ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இன படுகொலை, போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் பாலஸ்தீனம் வழக்கு தொடர்ந்து நீதி பெற முடியும். இதுகுறித்து இங்கிலாந்து கூறுகையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து கிரிமினல் கோர்ட்டை பாலஸ்தீன தலைவர்கள் அணுக முடியும் என்று தெரிவித்துள்ளது.

எ‌ன்கவு‌ன்ட‌ர்- எ‌ஸ்.ஐ கொலை‌யி‌ல் கைதான 24 பே‌ர் ‌பீ‌தி!

Saturday, December 01, 2012
சென்னை::காவல்உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சா‌ற்றப்பட்ட பிரபு, பாரதி ஆகியோர் நே‌ற்று காவ‌ல்துறை‌யினரா‌ல் எ‌ன்கவு‌ன்ட‌ரி‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் இ‌ந்த வழ‌க்‌கி‌ல் கைதான ம‌ற்ற 24 பேரு‌ம் த‌‌‌ங்களு‌க்கு‌ம் இ‌ந்த ‌நிலைமை ஏ‌ற்படுமோ எ‌ன்ற ‌அ‌ச்ச‌த்‌தி‌ல் மதுரை ம‌த்‌தி‌ய ‌சிறை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌கி‌‌ன்றன‌ர்.

கடந்த மாதம் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் குருபூஜையின்போது அவர்கள்து உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பது தொடர்பாக செல்லப்பாண்டியன் என்பவரது தரப்புக்கும், பிரபு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது செல்லப்பாண்டியனை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற பிரபுவை, காவல்துறையினர் வழிமறித்தபோது, அவர் கத்தியால் குத்தியதில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் உயிரிழந்தார். இது தொடர்பாக பிரபுவும், பாரதி உ‌ள்பட 24 பே‌ர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வேறொரு வழ‌க்‌கி‌ல் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக‌ ‌பிரபு‌ம், பா‌ர‌தியு‌ம் நேற்று வேனில் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது நெஞ்சுவலிப்பதாக பிரபு கூறியதால், காவல்துறையினர் வேனை நிறுத்தியபோது, அந்த இருவரும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.

இதில் சித்திரைவேல் என்கிற காவலர் உள்பட இரண்டு காவலர்கள் படுகாயமடைந்ததனர். தப்பிச்சென்ற இருவரும் தீர்த்தான்பேட்டை என்ற கிராமத்தின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் காவலர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது காவல்துறையினர் வந்த வாகனம் மீது, பிரபுவும், பாரதியும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கிவிட்டு தப்ப முயன்றன‌ர். இதையடுத‌்து இர‌ண்டு பேரையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் எ‌ன்கவு‌ன்ட‌ரி‌ல் சு‌ட்டு‌‌க் கொ‌ன்றன‌ர்.

இ‌ந்த எ‌ன்கவு‌ன்டரை தொட‌ர்‌ந்து எ‌ஸ்.ஐ. ஆ‌ல்‌வி‌ன் சுத‌ன் கொலை வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு ‌ம‌துரை ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 24 பேரு‌‌க்கு‌ம் த‌ற்போது ‌பீ‌தி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. த‌ங்களு‌க்கு‌ம் இ‌ந்த ‌நிலைமை ஏ‌ற்படுமோ எ‌ன்ற அ‌ச்ச‌த்த‌ி‌ல் இ‌ன்று ‌சிறை‌யிலேயே உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

த‌ங்க‌ள் உ‌யிரு‌க்கு உ‌த்தரவாத‌ம் அ‌ளி‌க்க‌க் கோ‌ரி கை‌திக‌ள் உ‌ண்ணா‌விரத‌‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளதா‌ல் மதுரை ம‌த்‌திய ‌சிறை‌‌ச்சாலை‌யி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னிடையே, எ‌ன்கவு‌ன்ட‌ரி‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்‌ல‌ப்‌ப‌ட்ட ‌பிரபு, பார‌தி ஆ‌கியோ‌ரி‌ன் உடலை வா‌ங்க உற‌வின‌ர்க‌ள் மறு‌த்து வரு‌கி‌ன்றன‌ர். எ‌ன்கவு‌ன்ட‌ர் ‌கு‌றி‌த்து உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி தலைமை‌யி‌ல் ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று இருவரது உற‌வின‌ர்களு‌ம் கோ‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளன‌ர்.

யாழ்.பல்கலைக்கழக (புலி ஆதரவு) மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் நள்ளிரவில் கைது!

Saturday, December 01, 2012
இலங்கை::யாழ்.பல்கலைக்கழக (புலி ஆதரவு)   மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் நள்ளிரவில் கைது:-

யாழ்.பல்கலைக்கழக (புலி ஆதரவு) மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று அவரது தாயார் ' தெரிவித்தார். இதுவரையில் நான்கு மாணவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:-
'நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்துவிட்டு 'வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தர்ஷானந்தை அழைத்துச் செல்லப் போகின்றோம்' என்று கூறினார். 
அவரை கைது செய்ததற்கான எந்தவிதமான ஆவணங்களையும் எமக்குப் பொலிஸார் வழங்கவில்லை.'' என்று  தர்ஷானந்தின் தாயார் தெரிவித்தார்.
  
இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பதில் துணைவேந்தர் பேரா சிரியர் வேல்நம்பி தெரிவித்தார்.
'கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் இருமாணவர்களின் பெயர் விவரங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
'இதன் பிரகாரம் இரண்டு மாணவர்களையும் நான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன்'' என்று தெரிவித்த அவர், விசாரணைகளின் பின்னர் மாணவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என பொலிஸார் கூறினர் என்றும் மாணவர்கள் இன்று விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான க.ஜெனமேனன், விஞ்ஞானபீட மாணவனான எஸ்.சொலமன் ஆகிய இருவருமே கோப்பாய் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
திருநெல்வேலிப் பகுதியில் நேற்றுமுன்தினம் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பிரிவினைவாதத்தை நோக்கமாக கொண்ட அணியொன்றுக்கு யாழ்ப்பாண மக்கள் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை சீர்குலைக்கின்றது - ருவான் வணிகசூரிய!

Saturday, December 01, 2012
இலங்கை::பிரிவினைவாதத்தை நோக்கமாக கொண்ட அணியொன்றுக்கு யாழ்ப்பாண மக்கள் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை சீர்குலைக்கும் தேவையிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலை;ககழக சூழலில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 27 ஆம் திகதி காவற்துறையின் கோரிக்கைக்கு அமைய இராணுவம் தயார் நிலையில் இருந்தாகவும்  28 ஆம் திகதி காவற்துறையினர் அப்படியான கோரிக்கையை விடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ் மக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்புகள் இருந்து வருகின்றன.  ரிவிரச இராணுவ நடவடிக்கை மூலம் படையினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் இந்த தொடர்புகள் இருந்து வருகின்றன.  2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பயங்கரவாதிகளிடம் இருந்து முழு நாடும் விடுவிக்கப்பட்ட பின்னர், இந்த தொடர்புகள் மேலும் உறுதியாகின. 
இராணுவம் செயற்படும் முறை குறித்து யாழ் மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அவர்கள் இராணுவத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு மக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை சீர்குலைக்க ஒரு குழுவினருக்கு தேவையாக உள்ளது. இந்த குழுவின் நோக்கம் பிரிவினைவாதமாகும்.  எதிர்காலத்i பொறுபேற்கும் பல்கலைக்கழக மாணவர்களையும் இதில் இணைத்து கொண்டுள்ளமையே எமக்கு கவலையளிக்கும் விடயமாக உள்ளது எனவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். 

அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட மேலும் 50 இலங்கையர்கள் நேற்று மாலை விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்

Saturday, December 01, 2012
இலங்கை::அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட மேலும் 50 இலங்கையர்கள் நேற்று மாலை விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு அலுவலகம் குறிப்பிடுகின்றது.
அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனதீவு, புத்தளம், புத்தளம், கம்பஹா மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளவர்களை மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு அலுவலகம் தெரிவிக்கின்றது.