Saturday, December 01, 2012
இலங்கை::பிரிவினைவாதத்தை நோக்கமாக கொண்ட அணியொன்றுக்கு யாழ்ப்பாண மக்கள் மற்றும் இராணுவத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை சீர்குலைக்கும் தேவையிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலை;ககழக சூழலில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 27 ஆம் திகதி காவற்துறையின் கோரிக்கைக்கு அமைய இராணுவம் தயார் நிலையில் இருந்தாகவும் 28 ஆம் திகதி காவற்துறையினர் அப்படியான கோரிக்கையை விடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
யாழ் மக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்புகள் இருந்து வருகின்றன. ரிவிரச இராணுவ நடவடிக்கை மூலம் படையினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் இந்த தொடர்புகள் இருந்து வருகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பயங்கரவாதிகளிடம் இருந்து முழு நாடும் விடுவிக்கப்பட்ட பின்னர், இந்த தொடர்புகள் மேலும் உறுதியாகின.
இராணுவம் செயற்படும் முறை குறித்து யாழ் மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அவர்கள் இராணுவத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு மக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை சீர்குலைக்க ஒரு குழுவினருக்கு தேவையாக உள்ளது. இந்த குழுவின் நோக்கம் பிரிவினைவாதமாகும். எதிர்காலத்i பொறுபேற்கும் பல்கலைக்கழக மாணவர்களையும் இதில் இணைத்து கொண்டுள்ளமையே எமக்கு கவலையளிக்கும் விடயமாக உள்ளது எனவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment