புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சிறப்பு கோர்ட், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வி
தித்துள்ளது.கடந்த 2009 ல் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2009ல் வழக்கு தொடரப்பட்டது. இதில் சில நாட்கள் வைகோ சிறையில் இருந்தார். இந்த வழக்கில் இன்று (ஜூலை 5) தீர்ப்பு வழங்கிய சென்னை சிறப்பு கோர்ட், வைகோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. வைகோவுக்கு ஒராண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
கோர்ட் உத்தரவுப்படி 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை கட்டிய வைகோ, தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலின் போது, போடப்பட்ட ஒப்பந்தப்படி, மதிமுகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்க திமுக முன்வந்துள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., ஆகும் கனவில் வைகோ இருந்தார். ஆனால், எம்.பி.,யாக நினைத்திருந்த வைகோவை, இந்த வழக்கு கம்பி எண்ண வைத்துள்ளது.
ஒரு மாதம் நிறுத்தம்:வைேகோ வேண்டுகோளை ஏற்று தண்டனையை ஒரு மாதத்திற்கு கோர்ட்
நிறுத்தி வைத்தது.
நிறுத்தி வைத்தது.
No comments:
Post a Comment