Thursday, July 4, 2019

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் பெண்களை களையெடுக்க “ராணுவ பெண் போலீஸ் படை”! 100 இடங்களுக்கு 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர் !!

ஆண்டுக்கு 100 பெண்கள் வீதம் அடுத்த 17 ஆண்டுகளில், ராணுவ போலீஸ் பணியில், அதிகாரிகளுக்கு கீழான அதிகாரத்தில் 1,700 பெண்களை நியமிக்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்தது. இதற்காக தேர்வு செய்யப்படும் பெண் வீராங்கனைகளுக்கு பெங்களூருவில் பயிற்சி அளிக்க ரா
ணுவம் முடிவு செய்துள்ளது. பின்னர் அவர்களை காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெண் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: –ராணுவ போலீஸ் அதிகாரிகளாக பெண்களை நியமிக்க தேர்வு நடந்து வருகிறது. 100 பணியிடங்களுக்கு தற்போது வரை 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள்
பெல்காமில் ஆட்கள் தேர்வு துவங்கும். ராணுவத்தில் பெண் போலீஸ் இல்லாதது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் போன்ற பகுதிகளில், பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ பெண் போலீஸ் மூலம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பெண்கள் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது எளிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment