அமெரிக்காவின் நேற்று முன்தினம் திடீரென புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜினியா மாகணங்களில் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் 4 அடி அளவுக்கு வெள்ளம் தேங்கியிருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜார்ஜ் வாஷிங்டன் நினைவு பூங்கா பகுதியில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் பல கார்கள் சிக்கின. இதனால் அதில் பயணம் செய்தவர்கள் தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர். ரீகன் விமான நிலையத்திலும் வெள்ளம் புகுந்ததால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஆர்லிங்டன் மெட்ரோ ரயில் நிலைய கூரை வழியாக மழைநீர் வழிந்தோடும் காட்சிகள் உள்பட பல மழை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலை தளங்களில் பகிரப்பட்டது. பல இடங்களில் வெள்ளம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மோட்டார் படகுகள் மூலம் மீட்பு படையினர் மீட்டனர். பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதியில் தேங்கியிருந்த வெள்ளத்தை, நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
No comments:
Post a Comment