அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், கிழக்கு ஆசிய நாடான வட கொரிய அதிபர், கிம் ஜோங் உன்னை, மூன்றாவது முறையாக நேற்று சந்தித்து பேசினர். வட கொரிய மற்றும் தென்கொரிய எல்லையில், போர் நிறுத்தப் பகுதியில் நடந்த, வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சந்திப்பு, உலக நாடுகளிடையே, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கண்டித்தனஐ.நா., எனப்படும், ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி, வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டு சோதனைகள் நடத்தி வந்தது. வட கொரிய அதிபரின் இந்தச் செயலை, உலக நாடுகள் கடுமையாக கண்டித்தன.அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர், கிம் ஜோங் உன்
இடையே நேரடி மோதலே ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைகளால் தாக்கி, அறிக்கை வெளியிட்டனர். இந்த மோதலை தீர்த்து வைக்க, தென் கொரியா களம் இறங்கியது.தென் கொரிய அதிபர், மூன் ஜேயின் ஏற்பாட்டில், கடந்த ஆண்டு, சிங்கப்பூரில், டிரம்ப் மற்றும் கிம் சந்தித்து பேசினர். இதையடுத்து, தன் சோதனைகளை வட கொரியா நிறுத்தியது. இருப்பினும், சக்தி வாய்ந்த அணுகுண்டுகள், ஏவுகணைகளை அழிக்கவில்லை.அடுத்த கட்டமாக, தென்கிழக்கு ஆசிய நாடான, வியட்நாமில், இந்தாண்டு பிப்ரவரியில், மீண்டும் சந்தித்து பேசினர். ஆனாலும், பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இரு நாடுகளும், நேருக்கு நேர் சந்தித்து பேசியும், உடன்பாடு ஏற்படாதது, உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இரு நாடுகளும் இனி, சமாதானமாக வாய்ப்பில்லை என்றே, மற்ற நாடுகள் நினைத்தன.இந்த நிலையில், ஜப்பான் நாட்டில், கடந்த, 28 மற்றும், 29ம் தேதிகளில் நடந்த, 'ஜி - 2
0' மாநட்டில், டிரம்ப் பங்கேற்றார். நேற்று முன்தினம் மாநாடு நிறைவு பெற்றது. அப்போது, 'ஜப்பானில் இருந்து அமெரிக்கா செல்லும் வழியில், தென் கொரிய அதிபரை சந்திக்கிறேன். அப்போது, உங்களையும் சந்தித்து, 'ஹலோ' சொல்ல விரும்புகிறேன்' என, வட கொரிய அதிபருக்கு, 'டுவிட்டர்' சமூக வலைதளப் பதிவு மூலம், அழைப்பு விடுத்தார்.யாருமே எதிர்பாராத வகையில், தென் கொரிய - வட கொரிய எல்லையில், போர் நிறுத்தப் பகுதியான, பன்முன்ஜோம் நகரில், நேற்று, டிரம்ப் மற்றும் கிம் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, தென் கொரிய அதிபர், மூன் ஜோயின் உடனிருந்தார்.உன்னதமான நாள்'போர் நிறுத்தப் பகுதி யில் நடந்த இந்த சந்திப்பை, மிக பெருமையாக கருதுகிறேன். உலகத்துக்கு இது ஒரு உன்னதமான நாள்' என, டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதே போல, 'கடந்த கால மோசமான நிகழ்வுகளை மறந்து, புதிய எதிர்காலத்தை எதிர்நோக்கும் டிரம்பின், நம்பிக்கை வீண்போகாது என்று நம்புகிறேன்' என, கிம் குறிப்பிட்டார்.வரலாற்று புகழ் வாய்ந்த, இந்த சந்திப்புக்கு பின், டிரம்ப், அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டார்.வட கொரிய நாட்டுக்கு சென்ற, முதல் அமெரிக்க அதிபர், டிரம்ப் என்பதும், வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக அமைந்து விட்டது.
No comments:
Post a Comment