மேற்கு ஆசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாய் இளவரசி, ஹயா பின்ட் அல்ஹுசைன், 45, தன் குழந்தைகளுடன், நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் அடைக்கலம் கோரிய நிலையில், மற்றொரு ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தப்பியோடினார்மேற்கு ஆசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாயின் பட்டத்து இளவரசர், ஷேக் முகம்மது பின் ரஷீத் அல்மக்தோம்; உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். யு.ஏ.இ.,யின் துணை அதிபர் மற்றும் பிரதமராக உள்ளார்.இவருடைய மகளான, இளவரசி, லதிபா, 33, கடந்தாண்டு நாட்டை விட்டு
தப்பியோடினார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள, முன்னாள் பிரான்ஸ் உளவு அதிகாரியான, ஜீனா பியிரே ஹார்வே ஜாபர்டுடன் தப்பிச் சென்ற அவர், இந்தியாவின் கோவாவுக்கு அருகே, கடல் பகுதியில் காணப்பட்டார். தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தான் கொடுமைபடுத்தப்படுவதாகவும், அவர் புகார் கூறியிருந்தார்.
தப்பியோடினார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள, முன்னாள் பிரான்ஸ் உளவு அதிகாரியான, ஜீனா பியிரே ஹார்வே ஜாபர்டுடன் தப்பிச் சென்ற அவர், இந்தியாவின் கோவாவுக்கு அருகே, கடல் பகுதியில் காணப்பட்டார். தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தான் கொடுமைபடுத்தப்படுவதாகவும், அவர் புகார் கூறியிருந்தார்.
பின்னர் மீட்கப்பட்ட அவர், மீண்டும், யு.ஏ.இ., சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் குறித்த எந்த தகவலும் இல்லை.இந்த நிலையில், பட்டத்து இளவரசர், அல்மக்தோமின், ஆறாவது மனைவியான, இளவரசி ஹயா, தன், 11 மற்றும், 7 வயது குழந்தைகளுடன், யு.ஏ.இ.,யில் இருந்து வெளியேறியுள்ளார். ஜோர்டான் மன்னர், அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரியான இவர், ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்தவர். பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, விவாகரத்து கேட்கப் போவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவர் ஜெர்மனி நாட்டு துாதர் ஒருவரின் உதவியுடன், ஜெர்மனிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. தன்னுடன், இந்திய மதிப்பில், 271 கோடி ரூபாய் பணத்தையும் அவர் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.அரசு மறுப்புஇளவரசி மற்றும் தன் குழந்தைகளை ஒப்படைக்கும்படி, ஜெர்மனி அரசிடம், இளவரசர் அல்மக்தோம் கோரியிருந்தார். ஆனால், அவர்களை ஒப்படைக்க, ஜெர்மனி அரசு மறுத்துவிட்டது.இந்த நிலையில், பிரிட்டனின் லண்டன் நகருக்கு, தன் குழந்தைகளுடன், இளவரசி, ஹயா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment