கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பு உத்தியோகபூர்வமாக கட்சியின் தேசிய மாநாட்டில் அறிவிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு தேசிய மாநாடு செப்ரெம்பரில் அல்லது அதற்கு முன்னர் நடாத்தப்படும் என
அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் கட்சித் தலைவர்களின் சந்திப்பில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்குமாறு கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.எனினும், ஐ.தே.க தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை என, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததுடன், பொதுஜனபெரமுனவின் வேட்பாளர்
சரியான நேரத்தில் அறிவிக்கப்படுவார் எனத் தெரிவித்தார்..ஜனாதிபதியின் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒரு அடிப்படை யோசனை ஏற்கனவே தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சரியான நேரத்தில் அறிவிக்கப்படுவார் எனத் தெரிவித்தார்..ஜனாதிபதியின் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒரு அடிப்படை யோசனை ஏற்கனவே தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment