Saturday, June 1, 2019

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து ஆணைக்குழு தலைவர் தகவல்!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இந்த தகவலைக் கூறியுள்ளார்.
 
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின்
தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ளதாகவும் இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment