தமது அனுபவங்களை பயன்படுத்தி அடிப்படைவாதிகளை ஒழிப்பதற்காக பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.கொழும்பு – விஜேரமாவத்தையில் அமைந்துள்ள எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் எதிர்கட்சி தலைவருடன் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 28 ஆம் திகதி எதிர்கட்சி தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பிரதானிகளுக்கிடையே இடம்பெற்றது.
இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, பாதுகாப்பு படைகளின் முன்னாள் தலைமையதிகாரி ஜெனரால் ஜகத் ஜயசூரிய, கடற்படையின் முன்னாள் தளபதிகளான அத்மிரால் வசந்த கரன்னாகொட, அத்மிரல் மொஹான் விஜேவிக்ரம, அத்மிரால் ஜயந்த கொலம்பகே, இராணுவ முன்னாள் தளபதி ஜெனரால் தயா ரத்னாயக்க, வான்படை முன்னாள் தளபதி எயார் சீப் மார்சல் ரொஷான் குணதிலக்க காவற்துறை முன்னாள் அதிபர்களான மகிந்த பாலசூரிய மற்றும் சந்ரா பெர்ணான்டோ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.இந்தநிலையில், குறித்த அறிக்கை எதிர்கட்சி தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment