Friday, May 3, 2019

உளவியல் ஆலோசனை மய்யத்தால் மக்களுக்கான விழிப்பூட்டல் துண்டுப்பிரசுரங்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி வைப்பு!


நாட்டில் காணப்படும் அசாதாரண நிலைமைகள் காரணமாக பொது மக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸாரினால் மக்களுக்கான விழிப்பூட்டல் முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொலிஸாருடன் கைகோர்த்து உளவியல் ஆலோசனை மய்யம் இலங்கை குழுமம், மக்களுக்காக,தேசிய பாதுகாப்புக்கான மக்கள் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொலிஸாரின் ஆலோசனைகளுக்கமைய அச்சிட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையங்களுக்காக வழங்கினர்..
 
உளவியல் ஆலோசனை மய்யத்தின் பிரதி தலைவர் கிறிஸ்டி,  நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ரொஷாந்தன் அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து (12) பொலிஸ் நிலையங்களுக்குமான துண்டுபிரசுரங்களை நேற்று முன் தினம் மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர்அலுவலகத்தில் பிரதி பொலிஸ்மா அதிபரின் பிரத்தியேக செயளாலர் கல்பகே அவர்களிடம் கையளித்தனர்.

No comments:

Post a Comment