இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.கடந்த 21 ஆம் திகதி 3 தேவாலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டவர் மட்டக்குளி மத்திய வீதியை சேர்ந்த இலாஹுதின் அஹமட் முவாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டவர் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த அச்சி மொஹமட் ஹஸ்துன் என்பவர் என தெரியவந்துள்ளது. இந்த குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவரின் மனைவி சாரா அண்மையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார். அவர் சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரால் நம்பப்படுகின்றது.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோடலுக்கு மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என்பவரினால் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் இரண்டு பேர் தொடர்புபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மொஹமட் ஹாசிம் மொஹமட் சஹ்ரான், அவரது மனைவி மற்றும் மகள் சாய்ந்தமருது வீட்டில் இருந்து பொலிஸார் காப்பாற்றப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சஹ்ரானின் தந்தை மற்றும் சகோதரர்கள் சாய்ந்தமருது வீட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் நம்பப்படுகின்றது.
இதேவேளை, ஷங்கிரிலா ஹோட்லுக்கு தாக்குதல் மேற்கொண்டவர் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவராகும். அவர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவராகும். அத்துடன் சினமன் கார்டன் ஹோட்டலுக்கு அவரது சகோதரரான மொஹமட் இப்ராஹிம் இன்ஷான் அஹமட் என்பவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் சகோதரன் மற்றும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட மஹவில பூங்கா வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் பாத்திமா இல்ஹாட் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். அவர் ஷங்கிரிலா ஹோட்டலுக்கு தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இல்ஹாமின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு சியோன் தேவலாயத்திற்கு மொஹமட் நசார் மொஹமட் அசாத் என்பவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவராகும். தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ஹோட்டலில் குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்தவர் அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்பவராகும்.
தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் பல்வேறு சொத்துக்கள் தொடர்பில் தகவல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெயர் பட்டியல் பின்வருமாறு,
01. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான்
02. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்
03.சினமன் கிரேன்ட் ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட்
04.கிங்ஸ் பெரி ஹோட்டல் ;- மொஹம்மட் அஸாம் மொஹம்மட் முபாரக்
05.புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு ;- ஹச்சி மொஹம்மட் மொஹம்மட் ஹஸ்துன்
06. புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை ;- அலாவுதீன் அஹமட் முவாத்
07. சீயோன் தேவலயம் மட்டக்களப்பு ;- மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸாத்
08. தெஹிவளை ;- அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட்
09. தெமட்டகொடை ;- பாதிமா இன்ஹாம்
No comments:
Post a Comment