தெற்கு அதிவேக வீதியின் கொடகம பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை , கரன்தெனிய மற்றும் ஹக்மன பிரதேசங்களை சேர்ந்த சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து இரண்டு கிராம் 630 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ஹெரோயினுடன் சிக்கிய பெண்!
அனுராதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 9 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.மேலும் , குறித்த பெண்ணிடம் இருந்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் காவற்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.தலாவ பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரான பெண் இன்று அனுராதபுர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
I really enjoyed your blog Thanks for sharing such an informative post.
ReplyDeletehttps://thetravelius.com/