கல்முனை சாய்ந்தமருதில் சுனாமி குடியிருப்பு வட்டாரத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு is துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டதை இராணுவம் உறுதி செய்தது.
குடியிருப்பு பகுதி என்பதால் முப்படைகளின் தேடுதல் நடவடிக்கை மெதுவாக நடக்கிறது. தற்கொலைதாரிகள் மேலும் இருக்கலாமென அஞ்சப்படுகிறது. கிழக்கில் முழுமையாக நிலைகொண்டுள்ள படைப்பிரசன்னம் மற்றும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கல்முனை வைத்தியசாலையில் ஒருவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று சம்மாந்துறையில் ஐ எஸ் சீருடைகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.அதேபோல் தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் என்று சொல்லப்படும் சஹ்ரானின் உறவினருக்கு சொந்தமான பதியப்படாத புது வேன் ஒன்றும் கல்முனையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி இது அக்கரைப்பற்றில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. சாய்ந்தமருதில் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல படையினர் எவரையும் அனுமதிக்கவில்லை. கொழும்பில் இருந்து நேற்றிரவு விசேட புலனாய்வு குழுக்கள் களமுனைக்கு புறப்பட்டன.
No comments:
Post a Comment