கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தையடுத்து அப்பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்து 15 பேரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கல்முனை போக்குவரத்துப் பிரிவில் சேவை புரியும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் பேரில் மேற்கொண்ட சோதனையின் பேரிலேலே இந்த வெடிபொருட்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன.
இதன்போதுதான் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இராணுவமும் சேர்ந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.குறித்த வீட்டிற்குள் 3 ஆண்களும், 3 பெண்களும், குழுந்தைகள் ஆறுபேருடைய சடலங்களும் காணப்படுவதாகவும், வீட்டிற்கு வெளியே தற்கொலை குண்டுதாரி எனச் சந்தேகிக்கப்படும் 4 ஆண்களுடைய சடலங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
பொலிஸாரும் படையினரும் அவ்வீட்டுக்குள் செல்கையில் படுகாயமடைந்த நிலையில் சிறு பிள்ளையொன்றும் பெண் ஒருவரும் காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சோதனை நடவடிக்கைகள் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசங்களில் is பயங்கரவாத குழுவுடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோக மோதலில் பாதுகாப்புப் படையினருக்கோ, பொலிஸாருக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பெண்கள் மூவரும் சிறுவர்கள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment