நாட்டில் குண்டுத் தாக்குதல் நடாத்திய அடிப்படைவாத அமைப்பின் உறுப்பினர்கள் இந்தியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்கு இந்திய கடலோரப் பாதுகாப்பு படையினர் இந்திய – இலங்கை கடல் எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
எந்தவொரு வேளையிலும் இலங்கை கடற்படைப் பிரிவினருக்கு விமானப் படைக் கண்காணிப்பு வசதிகளை வழங்கவும், தேவையான படகு வசதிகளை கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை கடற்படையினர் கடற் பிரதேசங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கடற் படையின் கண்காணிப்பு படகுகள் 24 மணி நேரமும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லுதினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளதாக சகோதர தேசிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment