பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என மாலைத்தீவு ஜனாதிபதி ஈப்ரஹீம் மொஹமட் சோலி தொலைபேசியினூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 21 ஆம் திகதி நடைபெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்த வேளையில் சகோதர நாடான மாலைத்தீவு இலங்கையுடன் கைகோர்த்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சகலரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் சுகமடைய வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாசகார பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முழுமையாக துடைத்து எறிவதற்கு இலங்கை பாதுகாப்புப் பிரிவுக்கு முடியுமாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment