கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்கு சென்ற படையினருக்கும் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இருந்த ஆயுததாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடைபெற அதேவேளையில் சம்மாந்துறையில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் பயன்படுத்தும் மேலங்கிகள் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதேபோன்று சாய்ந்தமருறு சுனாமி வீட்டுத்திட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுது இதன்போது ஆயுததாரிகள் சிலர் பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை அமுலாகும் வகையில் காவல் துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான நிலைமையை கருத்தில் கொண்டே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் தீவிரவாதிகள் பாதுகாப்பாக மறைந்திருக்கும் வீடு ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த வீட்டினை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் பதிலுக்கு படையினரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்ற வேளையில் தொடர்ச்சியாக மூன்று வெடிப்பு சம்பவங்களும் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிற்குள் மறைந்திருந்த தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க செய்திருக்ககூடும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment