Monday, April 22, 2019

கட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு - செயலிழப்பு-!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் காணப்படும் வீதி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு, செயலிழப்பு செய்யப்பட்டதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பைப் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணி நிறைவுக்கு வரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment