எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் பலர் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் ஒன்று விஜேராபவிலுள்ள எதிர்க் கட்சித் தலைவரின் வீட்டில் நடைபெற்றுள்ளது.நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் கடற்படைத் தளபதிகளான வசந்த கரன்னாகொட, மொஹான் விஜேவிக்ரம, முன்னாள் இராணுவத் தளபதிகளான தயா ரத்னாயக்க, ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஸான் குணதிலக்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஸ, ஜி.எல். பீரிஸ், பந்துல குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
அடிப்படைவாதத்தை தோற்கடிக்கவும், தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தவும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை அவசரமாக வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறித்த முன்னாள் பாதுகாப்புப் பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment