நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் விசா இல்லாமல் இந்நாட்டில் தங்கியிருந்த 13 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி , கல்கிஸ்ஸ - வடரப்பல பிரதேசத்தில் 6 பேரும் மற்றும் வெலிகட பிரதேசத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்கள் அனைவரும் நைஜீரியா பிரஜைகள் என தெரியவந்துள்ளது.
நவகமுவ பகுதியில் ஈரான் நாட்டவரும் , ரத்மலானை பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை - நெதிமால பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் 38 வயதுடையவர் என காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

சஹரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் மதவாச்சிய - இகிரிகொல்லேவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதவாச்சிய காவற்துறைக்கு மற்றும் காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
47 வயதுடைய மொஹமட் ஷாபிர் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய தவூஹித் ஜமாத் அமைப்பின் சார்பில், கொழும்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த ஒருவர் வாழைத்தோட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடம் இருந்து குறித்த அமைப்புக்கு சொந்தமான பொருட்கள் சிலவும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இலங்கையில் தானே, குண்டு தாக்குதலை நடத்தியதாக சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு, தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தெரிவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த நபரிடம் சென்னை காவற்துறையினர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தான் மதுபோதையில் இவ்வாறு அழைப்பை மேற்கொண்டு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

No comments:
Post a Comment