நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
கல்கிஸ்ஸை – டெம்பல்ஸ் வீதி பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீடொன்று தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.காவல்துறை அதிரடிப்படையினால் குறித்த பரிசோதனை இடம்பெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment