பிரஸ்ஸல்ஸ்: டிரம்ப் மேற்கொண்டுவரும் அர்த்தமற்ற வரிவிதிப்பு முறையால் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு பல புதிய வரிகளை டிரம்ப் அரசு விதிக்கத்துவங்கியுள்ளது. தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அதே அளவுக்கு பிற நாடுகள் தங்களிடம் பொருட்களை வாங்க வேண்டும், இல்லையேல் கூடுதலாக வரி விதிப்போம் எனக்கூறி டிரம்ப் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் வர்த்தக போர் நடத்தி வருகிறார். அருகாமை நாடுகளாக கனடா உள்ளிட்டவையும் டிரம்பின் பார்வையில் தப்பவில்லை. இதனால் அமெரிக்க பொருட்களுக்கு கனடா பல மடங்கு வரியை விதித்துஉள்ளது.சீனா இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்ததும், அமெரிக்க பொருட்களுக்கு சீனா பல மடங்கு வரியை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், 'சீனாவைப் போன்று ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்காவை ஏமாற்றி வருகின்றன' எனக்கூறி அங்கிருந்து வரும் கார் உள்ளிட்டவைகளுக்கு கூடுதலாக 20 சதவீத வரிவிதிப்பை டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு எதிர்வினையாக அமெரிக்க தயாரிப்பு ஜீன்ஸ், ஹார்லி டேவிட்சன் பைக் உள்ளிட்டவைகளுக்கு ஐரோப்பிய யூனியன் பலமடங்கு வரியை அதிகரித்தது. தங்களின் முக்கிய சந்தையான ஐரோப்பிய பகுதியில் விற்பனை பாதிக்கப்படுவதை தவிர்க்க ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஐரோப்பியநாட்டில் தனது உற்பத்தியை துவங்க உள்ளதா அறிவித்தது.இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், அவர்கள் பென்ஸ் காரை நமக்கு அனுப்புவார்கள், ஆனால் உணவு பொருட்களை தர மாட்டார்கள். நம் விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளனர். நமக்குதேவையான உணவை நாம் தயாரித்துக்கொ
ள்வோம்' என டுவீட் செய்தார்.இதையடுத்து டிரம்பின் கொள்கை அமெரிக்க பொருளாரத்தை அழித்துவிடும் என ஐரோப்பிய யூனியன் கடிதம் மூலம் எச்சரித்துள்ளது.டிரம்பிற்கு ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன் கிளாட் ஜுங்கர் எழுதிய கடிதத்தை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.அதில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு 294 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்கிறோம். அமெரிக்காவின் இறக்குமதியில் இது 19 சதவீதம். அமெரிக்க சாலைகளில் ஓடும் பல கார்கள் எங்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளே. அமெரிக்காவில் உள்ள ஐரோப்பிய யூனியன் நிறுவனங்கள் 2.9 மில்லியன் தயாரிப்புகளை அளித்துள்ளன. இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 29 சதவீதம் ஆகும்.
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அமெரிக்காவில் கிடைத்துள்ளன. எங்கள் நிறுவனங்கள் தெற்கு கரோலினா, அலபாமா, மிசிசிபி உள்ளிட்ட மாகாணங்களில் உள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கை அனைத்தையும் புரட்டிப்போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே கொள்கையில் டிரம்ப் செயல்பட்டால் அமெரிக்க பொருளாதாரம் அழியும். இதை செனட்டர்கள் கவனத்தில் கொண்டு கொள்கை மாற்றத்தை உருவாக்க செய்ய வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.யூனியனின் உறுப்பு நாடுகள் 28ம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.
டிரம்ப் மேற்கொண்டுவரும் வரி விதிப்புகளுக்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த கடிதம் மேலும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment