அதிபர் தேர்தலின்போது சீனாவிடமிருந்து தேர்தல் நிதி பெற்றதாக எழுந்த புகார்களை மஹிந்த ராஜபக்ச மறுத்துஉள்ளார்.2015-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, ராஜபக்சேவின் பிரசார செலவுகளுக்காக சீனா 76 லட்சம் டாலர் ( ரூ.52 கோடி) அளித்ததாக "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.
இலங்கையில் இந்த செய்தி பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொழும்புவில் நிருபர்களிடம் ராஜபக்சே கூறியது: 2015- அதிபர் தேர்தலின்போது எனது பிரசாரத்துக்காக சீனா எந்த பணமும் வழங்கவில்லை.என்மீது குற்றம் சாட்டும் அதில், என்னை நேரடியாக குறை கூறவில்லை. என்னுடன் 'தொடர்புடையவர்கள்', 'தேர்தல் பிரசார உதவியா
ளர்கள்'நிதி பெற்றதாகக் குறிப்பிடுகின்றனர். யார் பணம் கொடுத்தார்கள், எந்த விதத்தில் வந்தது என்பதற்கு அவர்களிடம் பதில் இல்லை. முழுக்க முழுக்க என் மீது குற்றம் சாட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலரை திருப்திப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.இலங்கையின் இன்றைய நிலை கவலையளிக்கிறது. பிற நாடுகளின் கட்டுப்பாட்டில் தேசம் செல்வது நல்லதல்ல. இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனுக்கும், நாட்டின் சுதந்திர தன்மைக்கும் பிற நாடுகளால் ஆபத்து வந்துவிடக்கூடாது, என்றார்.
No comments:
Post a Comment