Friday, January 27, 2017

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இன்று நடைபெறவுள்ள கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆயத்தமாக இருந்ததாகவும், எனினும், அவர்களை பங்கேற்க வேண்டாம் என தாம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத காலம் வரையில் அவரை பிணையில் விடுதலை செய்ய வேண்டாம் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
அத்துடன், இதுதொடர்பில் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கின்றதா அல்லது அமைச்சர்கள் தீர்மானங்கள் எடுக்கின்றார்களா என்பது புரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment