வாஷிங்டன்: உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்
கிடைத்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
பிரபல
அமெரிக்க மாதாந்திர பத்திரிக்கையான அமெரிக்கன் பாரின் பாலிசி, 2017 ம்
ஆண்டுக்கான உலகின் எட்டு வல்லரசு நாடுகள் பட்டியலை தயாரித்தது.
அப்பத்திரிக்கை நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஆறாம் இடம்
கிடைத்துள்ளது.
மற்ற நாடுகள்
அமெரிக்கன்
பாரின் பாலிசி என்ற அந்த அமெரிக்க மாதாந்திர பத்திரிக்கை நடத்திய ஆய்வின்
அடிப்படையில் 2017 ம் ஆண்டிற்கான வல்லரசு நாடுகளில் முதலாவது இடத்தில்
அமெரிக்கா, இரண்டாம் இடத்தில் சீனா மற்றும் ஜப்பான், நான்காம் இடத்தில்
ரஷ்யா, ஜந்தாம் இடத்தில் ஜெர்மனி, ஏழாவது இடத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்
எட்டாம் இடத்திலும் உள்ளன.
வேகமாக முன்னேற்றம்
இந்தியாவை
பற்றி அப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலகின் மிகப்பெரிய
குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது. ஆங்கிலம் பேசும் மக்கள் தொகையில்
இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில்
தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் வேகமான முன்னேற்றம்
கண்டுள்ளது. இவ்வாறு அப்பத்திரிக்கை தனது செய்தி குறிப்பில்
வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment