Sunday, December 4, 2016

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க செல்வோம்: மீனவர்கள் ஆவேசம்!

ராமேஸ்வரம்:கச்சத்தீவு அந்தோணியார் கோவில் ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தடையை மீறி படகில் செல்வோம்' என, மீனவர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் பழைய சர்ச் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.
 
இதன் திறப்பு, ஆர்ச்சிப்பு விழா வரும், 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு, இலங்கை அரசு அழைப்பு விடுக்க வில்-லை. இந்நிலையில், கச்சத்தீவு ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க, தமிழக மீனவர்களுக்கு அனுமதி கோரி, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் மற்றும் மீனவர் சங்க தலைவர்கள் தமிழக அரசிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இலங்கையில் உள்ள மீ
னவர்களை அனுமதிக்காத நிலையில், தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
 
இது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ராமேஸ்வரம் பாதிரியார் உட்பட நான்கு பேருக்கு, கச்சத்தீவு சர்ச் விழாவில் பங்கேற்க, இலங்கை பாதிரியார் ஜோசப் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்க பாதிரியார் மற்றும் மீனவர்கள் மறுத்துவிட்டனர்.
இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறுகையில், ''கச்சத்தீவு சர்ச் விழாவில் இருநாட்டு மீனவர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், ஆர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. தடையை மீறி, ராமேஸ்வரத்தில் இருந்து, மூன்று படகுகளில் பாதிரியார், கன்னியாஸ்திரிகள் உட்பட, 105 பேர், கச்சதீவு செல்வோம்,'' என்றார்.

No comments:

Post a Comment