Friday, September 25, 2015

ஹக்கீமின் பொறுப்புகள் குறைப்பு; UDA, SLLRDC என்பன சம்பிக்கவுக்கு; றிஷாத் பதியுதீனுக்கு பொறுப்புகள் குவிப்பு!

Friday, September 25, 2015
அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடயதானங்கள் தொடர்பிலான வர்த்தமானி 
வெளியிடப்பட்டுள்ளது.
 
அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஒருசில அமைச்சுக்களின் கீழ் ஏற்கெனவே இருந்த பொறுப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.
 
இதன் பிரகாரம் கடந்த 100 நாள் அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தின் போது நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கீழ் இருந்து வந்த நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீள்நிரப்புதல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என்பன மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
 
அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையும் அதனுடன் தொடர்புடைய இன்னொரு நிறுவனமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
புதிய வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் இம்­முறை அதி­க­மான நிறு­வ­னங்கள், கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கீழ் செயல்­ப­ட­வுள்­ளன. கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் கீழ் 36 நிறு­வ­னங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.
 
இலங்கை மத்திய வங்கி, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, தேசிய இளைஞர் சேவைகள் மற்றும், ஊழியர் நம்பிக்கை நிதியம், மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட 20 நிறுவனங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
அனைத்து அரச வங்கிகள், ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின்லங்கா நிறுவனங்கள், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
திறைசேரி, சுங்கம், கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை காப்புறுதிச் சபை, தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை, அரச நிதித் திணைக்களம் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், தேசிய அருங்காட்சியகத் திணைக்களம் என்பன உள்விவகார , வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
பொலிஸ் திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரபனவின் பொறுப்பில் உள்ளன.
 
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை உள்ளிட்ட 10 நிறுவனங்கள் கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மத்திய கலாசார நிதியம் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
சிவில் விமான சேவை அதிகார சபை, வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியன போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
 
நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீள்நிரப்புதல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த குடி­வ­ரவு குடி­யகல்வு திணைக்­களம் இம்­முறை உள் நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் கீழும், சிறைச்­சாலை மற்றும் புனர்­வாழ்வு அமைச்சின் கீழ் இருந்த சிறைச்­சா­லைகள் திணைக்­களம் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழும் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன
 
தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் மீள­மைப்பு அமைச்சு என ஒரு அமைச்சு அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன், நீதி அமைச்சு மற்றும் பௌத்த சாசன அமைச்சு ஆகி­யன ஒரே அமைச்­சரின் கீழ் இருந்த போதிலும் அவை இரண்டும் தனித்­த­னி­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.
எவ்­வா­றா­யினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கீழ் உள்ள பாது­காப்பு, மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சில் மாற்­றங்கள் எதுவும் செய்­யப்­ப­ட­வில்லை.
 
அதன்­படி முப்­ப­டைகள் உள்­ளிட்ட 14 நிறு­வ­னங்கள் பாது­காப்பு அமைச்சின் கீழும் 17 நிறு­வ­னங்கள் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சின் கீழும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.
சுகா­தார அமைச்சில் மாற்­றங்கள் இடம்­பெ­றாத போதிலும், வரை­ய­றுக்­கப்­பட்ட இலங்கை திரி­போஷா நிறு­வனம் அவ்­வ­மைச்சின் கீழ் இணைக்­கப்­பட்­டுள்­ளது.
ஏற்­க­னவே கல்வி அமைச்சின் கீழ் 12 நிறு­வ­னங்­களே இருந்த நிலையில் இம் முறை 20 நிறு­வ­னங்கள் அவ்­வ­மைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. தொல்­பொருள் ஆராய்ச்சி திணைக்­களம், மத்­திய கலா­சார நிலையம் என்­ப­னவும் இம்­முறை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.
அத்­துடன் கடந்த 100 நாள் அரசின் காலத்தில் வெளி­வி­வ­கார அமைச்சின் கீழ் இருந்த ஸ்ரீ லங்கா ரெலிகொம், தொலைத்­தொ­டர்­புகள் திணைக்­களம் ஆகி­யன புதி­தாக உரு­வாக்­கப்­பட்டு ஹரீன் பெர்­ணான்டோ அமைச்­ச­ரிடம் கொடுக்­கப்­பட்­டுள்ள தொலைத் தொடர்­புகள் மற்றும் டிஜிட்டல் உட்­கட்­ட­மைப்பு அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.
 
இதே­வேளை, மலையக புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வசதி மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக உள்ள பழனி திகாம்­ப­ரத்தின் கீழ் உள்ள அமைச்சின் அதி­கா­ரத்­துக்கு உட்­பட்­ட­தாக கிரா­மிய சமூக அபி­வி­ருத்தி அதி­கார சபை, தோட்­டத்­துறை சுய­தொழில் நிதியம், பெருந்­தோட்ட வீட­மைப்பு அபி­வி­ருத்தி சபை, சௌமிய மூர்த்தி தொண்­டமான் ஞாப­கார்த்த மன்றம் என்­பன கொண்­டு ­வ­ரப்­பட்­டுள்­ளன.
தேசிய கலந்­து­ரை­யாடல் அமைச்சர் மனோ கணே­சனின் கீழ் உள்ள அமைச்சின் கீழ் அரச மொழிகள் திணைக்­களம், அரச மொழிகள் ஆணைக்­குழு, மொழிக்­கல்வி மற்றும் பயிற்சி அளிப்பு தொடர்­பான தேசிய நிறு­வகம், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் தொடர்­பான செய­லாளர் காரி­யா­லயம் என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன.
 
முழு விபரம்:
 
1933/13 என்ற இலக்­கத்தைக் கொண்ட இந்த வர்த்­த­மா­னி­யா­னது இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 43 ஆவது அத்­தி­யா­யத்தின் முத­லா­வது உப பிரிவின் கீழ் ஜனா­தி­ப­திக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­க­ளுக்கு அமை­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
 
அமைச்­ச­ரவை சத்­தி­யப்­பி­ர­மா­ணங்கள் கடந்த 4ஆம் மற்றும் 9ஆம் திக­தி­களில் இடம்­பெற்­றி­ருந்­தன. அந்த வகையில் 48 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சுக்கள் உள்ள போதிலும் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலில் 50 அமைச்­சுக்­க­ளுக்­கான அரச நிறு­வ­னங்கள் தொடர்­பி­லான தக­வல்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.
அமைச்­சுக்­களின் கீழ் உள்ள நிறு­வ­னங்கள் குறித்த விப­ரங்கள்:
1- பாது­காப்பு அமைச்சு
1. இலங்கை தரைப்­படை
2. இலங்கை கடற்­படை
3. இலங்கை விமா­னப்­படை
4. சிவில் பாது­காப்புத் திணைக்­களம்
5. சேர் ஜோன் கொத்­த­லா­வல
பாது­காப்பு பல்­க­லைக்­க­ழகம்
6. பாது­காப்பு சேவை கட்­டளை மற்றும் கூட்டு பல­்க­லைக்­க­ழகம்
7. இரா­ணுவ சேவை அதி­கார சபை
8. பாது­காப்பு சேவை பாட­சாலை
9. தேசிய மாணவர் படை­யணி
10. தேசிய பாது­காப்பு நிதியம்
11. தேசிய இர­க­சிய தக­வல்கள் சேவை
12. இலங்கை கரை­யோர பாது­காப்பு அதி­கார சபை
13. லங்கா லொஜிஸ்டிக்ஸ் லிமிடட்
14. ரக்ன லங்கா லிமிடட்
2. மகா­வலி அபி­வி­ருத்தி, சுற்­றாடல் விவ­கார அமைச்சு
1. இல­ங்கை மகா­வலி அதி­கார சபை
2. மொர­கஹகந்த, களுகங்கை நீர்­த்திட்­டங்கள்
3. வன, நீர் வளம் தொடர்­பி­லான திட்டம்
4. மகா­வலி ஒன்­றி­ணைக்­கப்­பட்ட திட்டம்
5. உட­வ­லவ திட்டம்
6. உமா ஓய அபி­வி­ருத்தித் திட்டம்
7. வன பாது­காப்பு திணைக்­களம்
8. மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை
9. பூகோள ஆய்­வுகள் மற்றும் சுரங்கம் தொடர்­பி­லான செய­லகம்
10. வரை­ய­றுக்­கப்­பட்ட ஜீ.எஸ்.எம்.பீ. தொழில் நுட்ப சேவை தனியார் நிறு­வனம்
11. தேசிய மரக் கூட்­டுத்­தா­பனம்
12. தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆப­ரண திணைக்­களம்
13. மாணிக்கக்கல் மற்றும் ஆப­ரண ஆய்வு நிறு­வனம்
14. லங்கா டிம்பர் பிளான்ட் அன்ட் இன்­டஸ்ரீஸ்
15. சமுத்­திர பாது­காப்பு அதி­கார சபை
16. கரை­யோர பாது­காப்பு திணைக்­களம்
17. பொறி­யியல் விட­யங்கள் தொடர்­பி­லான மத்­திய ஆலோ­சனை செய­லகம் மற்றும் அதன் கீழ் வரும் நிறு­வ­னங்கள்
3. தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும்
மீள­மைப்பு அமைச்சு
4. தேசிய திட்­டங்கள் மற்றும்
பொரு­ளா­தார விவ­கார அமைச்சு
1. தேசிய திட்­ட­மிடல் திணைக்­களம்
2. இலங்கை மத்­திய வங்கி
3. வெளி நாட்டு சொத்­துக்கள் தொடர்­பி­லான திணைக்­களம்
4. சனத்­தொகை மற்றும் புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­களம்
5. திட்ட மீளாய்வு நிறு­வனம்
6. தேசிய செயற்­பாட்டு நிலையம்
7. செயற்திட்ட முகா­மைத்­துவம்
மற்றும் மேற்­பார்வை திணைக்­களம்
8. இலங்கை பங்கு பரி­வர்த்­தனை கொமிஷன்
9. கடன் தக­வல்கள் தொடர்­பி­லான செய­லகம்
10. தேசிய வேத­னங்கள் சபை
11. தேசிய காப்­பு­று­திக்கு பொறுப்­பான நிதியம்
12. கல­வ­ரங்கள், நிறுத்­தங்கள், சிவில் பிரச்­சி­னைகள் மற்றும் பயங்­க­ர­வாதம் குறித்த நிதியம்
13. ஊழியர் நம்­பிக்கை பொறுப்பு நிதியம்
14. ஸ்ரீலங்கா பொது பயன்­பாடு கொமிஷன் சபை
15. மனித வள அபி­வி­ருத்தி தொடர்­பி­லான இலங்கை தேசிய சபை
16. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
17. தேசிய இளைஞர் சேனை
18. தேசிய இளைஞர் வினைத்­திறன் விருது வழங்கும் அதி­கார சபை
19. வரை­ய­றுக்­கப்­பட்ட தேசிய இளைஞர் சேவை கூட்­டு­றவு நிலையம்
20. தலை­மைத்­துவ அபி­வி­ருத்தி தேசிய மத்­திய நிலையம்
5- சுற்­றுலா அபி­வி­ருத்தி மற்றும் கிறிஸ்­தவ விவ­கார அமைச்சு
1. இலங்கை சுற்­றுலா மேம்­பாட்டு செய­லகம்
2. இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபை
3. இலங்கை கண்­காட்சி மற்றும் சம்­மே­ளன செய­லகம்
4. இலங்கை சுற்­றுலா மற்றும் ஹோட்டல் முகா­மைத்­துவ நிறு­வனம்
5. கிறிஸ்­தவ விவ­கார திணைக்­களம்
6.வனஜீவ­ரா­சிகள் அமைச்சு
1. தேசிய உயி­ரியல் பூங்கா திணைக்­களம்
2. தேசிய தாவ­ர­வியல் பூங்கா திணைக்­களம்
3. வனஜீவ­ரா­சிகள் பாது­காப்பு திணைக்­களம்
4. வனஜீவ­ரா­சி­களின் பொறுப்பு
7. போக்­கு­வ­ரத்து அமைச்சு
1. இலங்கை ரயில்வே திணைக்­களம்
2. இலங்கை மத்­திய போக்­கு­வ­ரத்து சபை
3. தேசிய போக்­கு­வ­ரத்து மருத்­துவ நிறு­வனம்
4. மோட்டார் வாகன திணைக்­களம்
5. தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்குழு
6. சிவில் விமான சேவை அதி­கார சபை
7. வரை­ய­றுக்­கப்­பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம்
8.வெளிவிவ­கார அமைச்சு
1. வெளிநாட்டு அரச தூதுவர் சபை
2. லக் ஷ்மன் கதிர்­காமர் கல்வி நிறு­வகம்
3. தேசிய சமுத்­திர நட­வ­டிக்கை உப குழு செய­லகம்
9. சமூக அபி­வி­ருத்தி மற்றும்
நலன்­புரி அமைச்சு
1. சமூக சேவை திணைக்­களம்
2. வயோ­தி­பர்கள் தொடர்­பி­லான தேசியசபை மற்றும் தேசிய வயோ­திப பொதுச்செய­லாளர் காரி­யா­லயம்
3. ஊன­முற்றோர் தொடர்­பி­லான பொதுச் செய­லக காரி­யா­லயம்
4. ஊன­முற்ற ஒருவர் தொடர்­பி­லான தேசிய சபை
5. தேசிய சமூக அபி­வி­ருத்தி நிறு­வனம்
6. திவிநெகும அபி­வி­ருத்தி திணைக்­களம்
7. கிராம அபி­வி­ருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறு­வனம்
8. சமூக பாது­காப்பு சபை
10. தொழி­லா­ளர்கள் மற்றும்
தொழில் அமைப்­புக்கள்
தொடர்­பி­லான அமைச்சு
1. தொழி­லாளர் திணைக்­களம்
2. தேசிய தொழிற் கல்வி நிறு­வனம்
3. ஊழியர் சேமலாப நிதியம்
4. தேசிய தொழில், காப்­பு­றுதி மற்றும் சுகா­தார காரி­யா­லயம்
5. தொழி­லாளர் காப்­புறுதி காரி­யா­லயம்
6. ஸ்ரீம வாசனா நிதியம்
7. மனித வளம் மற்றும் தொழிற்­பா­து­காப்பு நிறு­வனம்
8. வரை­ய­றுக்­கப்­பட்ட இலங்கை தொழி­லகம்
11. பல்க­லைக்­க­ழக கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சு
1. பல்­கலைக்கழக மானி­யங்கள் ஆணைக்குழு
2. பல்­கலைக்கழக மானி­யங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்­க­ழகம்
3. பல்­கலைக்கழக மானி­யங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள அனைத்து பட்­டப்­ப­டிப்பு நிறு­வ­னங்கள் மற்றும் ஏனைய நிறு­வ­னங்கள்
4. பிக்­குகள் பல­்க­லைக்­க­ழகம்
5. பெளத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழகம்
6. வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை மற்றும் அதன் கீழ் உள்ள நிறு­வ­னங்கள்
7. பாதை மேற்­பார்வை நிதியம்
12. நகர திட்­ட­மிடல் மற்றும்
நீர்ப்­பா­சன அமைச்சு
1. தேசிய நீர் வழங்கல், மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை
2. தேசிய சமூக நீர் விநி­யோக திணைக்­களம்
13. அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு
1. இடர் முகா­மைத்­துவம் தொடர்­பி­லான தேசிய சபை
2. அனர்த்த முகா­மைத்த­ுவ மத்­திய நிலையம்
3. தேசிய அனர்த்த நிவா­ரண சேவை மத்­திய நிலையம்
4. கால நிலை அவ­தான நிலையம்
5. தேசிய கட்­டி­டங்கள் ஆய்வு நிறு­வனம்
14. விஞ்­ஞான தொழில் நுட்ப
ஆய்வு அமைச்சு
1 ஸ்ரீ லங்கா இன்ஸ்­டி­ரிட்யூட் ஒப் நெனோ டெக்­­னொலொஜி பிறைவேட் லிமிடட்
2. தேசிய அடிப்­படை கல்வி நிறு­வனம்
3. தேசிய விஞ்­ஞான மன்றம்
4. தேசிய விஞ்­ஞான மற்றும் தொழில் நுட்ப ஆணைக்குழு
5. கிரக மண்­டலம்
6. ஆதர் சீ கிளார்க் நிறு­வனம்
7. இலங்கை தரப்­ப­டுத்தல் சபை
8. இலங்கை தர நிர்­ணய நிறு­வனம்
9. இலங்கை புத்­தாக்­குனர் ஆணை­யகம்
10. புத்­தாக்­குனர் நிதியம்
11. தேசிய பொறி­யி­ய­லாளர் ஆய்வு மற்றும் அபி­வி­ருத்தி மத்­திய நிலையம்
12. தேசிய ஆய்­வுகள் சபை
13. தொழில் நுட்ப நிறு­வனம்
15. சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் புன­ருத்­தா­பன அமைச்சு
1. பொலிஸ் திணைக்­களம்
2. தேசிய அபா­ய­க­ர­மான ஒள­த­டங்கள் அதி­கார சபை
3. சிறைச்­சா­லைகள் திணைக்­களம்
4. சமூக அடிப்­ப­டை­யி­லான திருத்த திணைக்­களம்
5. சிறுவர் குற்­ற­வா­ளிகள் தொடர்­பி­லான பயிற்சி பாட­சாலை
16. சுகாதார மற்றும் தேசிய
வைத்­திய அமைச்சு
1. சுகா­தார சேவைகள் திணைக்­களம்
2. ஸ்ரீ ஜய­வர்­தனபுர வைத்­தி­ய­சாலை
3. விஜ­ய­கு­மா­ர­துங்க நினைவு வைத்­தி­ய­சாலை
4. தேசிய ஒள­த­டங்கள் தொடர்­பி­லான சட்ட நிறு­வனம்
5 தேசிய ஒள­த­டங்கள் உற்­பத்தி நிறு­வனம்
6. அனைத்து அரச போதனா, தேசிய அரச வைத்­தி­ய­சா­லைகள்
7. தேசிய சுகா­தார சபை
8. வைத்­திய ஆய்வு நிறு­வனம்
9. தேசிய சுகா­தார வித்­தி­யா­லயம்
10. அஷ்ரப் நினைவு வைத்­தி­ய­சாலை
11. வைத்­திய இர­சா­யன ஆய்வு பாட­சாலை
12. இலங்கை வைத்­திய சபை
13. இலங்கை வைத்­திய வித்­தி­ய­ாலய சபை
14. தேசிய வைத்­திய அபி­வி­ருத்தி நிதியம்
15. தனியார் வைத்­திய வித்­தி­யா­லய சபை
16. தேசிய வெடிப்­புகள் நிரப்­புதல் மற்றும் ஒட்­டுதல் தொடர்­பி­லான நிறு­வனம்
17. வரை­ய­றுக்­கப்­பட்ட இலங்கை திரி­போஷா நிறு­வனம்
18. புகை­யிலை மற்றும் மது­சாரம் தொடர்­பி­லான அதி­கார சபை
19. ஆயுர்­வேத திணைக்­களம்
20. இலங்கை ஆயு­ர்வேத மருந்து நிறு­வனம்
21. ஆயுர்­வேத வைத்­தியர் சபை
22. ஆயுர்­வேத வித்­தி­யா­லயம் மற்றும் வைத்­தி­ய­சாலை சபை
23. ஆயுர்­வேத போதனா வைத்­தி­ய­சாலை
24. வெலி­சர ஹோமி­யோ­பதி வைத்­தி­ய­சாலை
25. ஹோமி­யோ­பதி வைத்­திய சபை
17. நிதி­ய­மைச்சு
1. திறைசேரி
2. அரச நிதி திட்­ட­மிடல் திணைக்­களம்
3. தேசிய வரவு–செலவுத் திட்ட திணைக்­களம்
4. அரச தொழில் முயற்­சி­யாண்மை திணைக்­களம்
5. அரச பணம் திணைக்­களம்
6. திறை­சேரி மேற்­பார்வை திணைக்­களம்
7. தேசிய கணக்­கியல் திணைக்­களம்
8. வர்த்­தக, முத­லீட்டு திட்ட திணைக்­களம்
9. அபி­வி­ருத்தி நிதிய திணைக்­களம்
10. கணக்­காய்­வாளர் திணைக்­களம்
11. தகவல் தொழில்நுட்ப முகா­மைத்­துவ திணைக்­களம்
12. சட்ட நட­வ­டிக்கை திணைக்­களம்
13. தேசிய வரு­மான திணைக்­களம்
14. அள­வை­யியல் திணைக்­களம்
15. முகா­மைத்­துவ சேவை திணைக்­களம்
16. இலங்கை சுங்கம்
17. கலால் வரி திணைக்­களம்
18. இலங்கை காப்­பு­றுதி சபை
19. இலங்கை கணக்­கியல், கணக்­காய்வு சபை
20. அரச சேவை சேமலாப நிதியம்
21. தேசிய லொத்தர் சபை
22. அபி­வி­ருத்தி லொத்தர் சபை
23. சீமாட்டி லோஹோர் நிதியம்
24. வரி மேன்முறை­யீட்டு ஆணைக் குழு
25. இலங்கை இறக்­கு­ம­தி­யாளர் கடன் காப்­பு­றுதி நிறு­வனம்
26. மிலோதா நிறு­வனம்
18. திறன் அபி­வி­ருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு
1. தொழில் கல்வி ஆணைக்குழு
2. ஸ்ரீ லங்கா தொழிற் பயிற்சி அதி­கார சபை
3. தேசிய தொழிற்­கல்வி பயிற்சி அதி­கார சபை
4. வரை­ய­றுக்­கப்­பட்ட திறன் அபி­வி­ருத்தி நிதியம்
5. இலங்கை – ஜேர்மன் தொழில் நுட்பக் கல்­லூரி
6. தேசிய வியா­பார முகா­மைத்­துவ நிறு­வனம்
7. தொழில்நுட்ப பல்­க­லைக்­க­ழகம்
8. இலங்கை அச்­சக கூட்­டுத்­தா­பனம்
9. இலங்கை தகவல் தொழில் நுட்ப நிறு­வனம்
10. தேசிய மீன்­பிடி மற்றும் கடல் தொழில் நுட்ப நிறு­வனம்
11. தேசிய தொழிற் கல்வி நிறு­வனம்
12. தொழிற் கல்வி மற்றும் பயிற்சி திணைக்­களம்
13. இலங்கை உயர் தொழில் நுட்ப கல்வி நிறு­வனம்
19. உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு
1. அனைத்து மாவட்ட செய­லக காரி­ய­ல­யங்கள்
2. அனைத்து பிர­தேச செய­லக காரி­யா­ல­யங்கள்.
3. பதிவாளர் திணைக்­களம்
20. உள் விவ­கார, வடமேல் அபி­வி­ருத்தி மற்றும் கலா­சார அமைச்சு
1. குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு திணைக்­களம்
2. ஆட்­ப­திவு திணைக்­களம்
3. கலா­சாரம் தொடர்­பி­லான திணைக்­களம்
4. தேசிய அருங்­காட்­சி­யக திணைக்­களம்
21. கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சு
1. வணிக திணைக்­களம்
2. பதிவாளர் நிறு­வன திணைக்­களம்
3. இலங்கை புலன் சொத்­துக்கள் செய­லகம்
4. இலங்கை கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபை
5. நுகர்வோர் தொடர்­பி­லான அதி­கார சபை
6. வரை­ய­றுக்­கப்­பட்ட லங்கா ச.தொ.ச.
7. வரை­ய­றுக்­கப்­பட்ட இலங்கை பொது வியாபார நிறு­வனம்
8. கூட்­டு­றவு மற்றும் மொத்த வியா­பார நிறு­வனம்
9. அள­வைகள் தரக்கட்­டுப்­பாட்டு திணைக்­களம்
10. உணவு ஆணையாளர் திணைக்­களம்
11. கூட்­டு­றவு அபிவிருத்தி திணைக்களம்
12. கூட்டுறவு சேவை ஆணைக்குழு
13. உள் நாட்டு வியாபார திணைக்களம்
14. தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம்
15. இலங்கை ஆடைத் தொழிற்சாலை நிறுவகம்
16. நெசவு கைத்தொழில் திணைக்களம்
17. கஹட்ட கஹ கிரபைட்
18. லங்கா லேலன்ட் லிமிடட்
19. லன்கா அசோக் லேலன்ட் லிமிடட்
20. வரையறுக்கப்பட்ட இலங்கை சீமெந்து நிறுவனம்
21 இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம்
22. மாந்தாய் சேல்ட் லிமிடட்
23. ஆனையிறவு உப்பளம்
24. லங்கா டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் எம்போரியம் லிமிடட்
25. லங்கா சலுசல லிமிடட்
26 தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகார சபை
27. தேசிய திறன் விருத்தி சபை
28. லக்சல
29. தேசிய வடிவமைப்பு மத்திய நிலையம்
30. சிறிய மற்றும் மத்திய அளவிலான முயற்சிகளுக்கான முதலீட்டு சங்கம்
31.சிறிய மற்றும் மத்திய அளவிலான முயற்சியாண்மை அதிகார சபை
32.வரையறுக்கப்பட்ட ஹிங்குராங்கொடை சீனி கைத்தொழில் நிறுவனம்
33. வரையறுக்கப்பட்ட லங்கா சீனி தனியார் நிறுவனம்
34. வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கூட்டுத்தாபனம்
35. லங்கா கனிய மணல் நிறுவனம்
36. பரந்தன் கெமிகல்ஸ் லிமிடட்
22. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு
1. நகர அபிவிருத்தி அதிகார சபை
2. இலங்கை காணி மீள் நிரப்பல் மற்றும் விருத்தி செய்யும் கூட்டுத்தாபனம்
3. தேசிய பெளதீக திட்ட திணைக்களம்
(தொடரும்…)

No comments:

Post a Comment