Sunday, September 13, 2015
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள
அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக 'த ஹிந்து நாளிதழ்"
செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 30வது மனித உரிமை மாநாடு எதிர்வரும் திங்கட் கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் கடந்த மார்ச் மாதம் சமர்பிக்கப்படவிருந்தது.
எனினும், புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததன் காரணமாக அது செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டது.
இந்தநிலையில்,
இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள மனித உரிமை அறிக்கை தொடர்பில்
பதில் வழங்குவதற்காக ஐந்து நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக 'த ஹிந்து
நாளிதழ்" செய்தி தாள் தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் இந்த அறிக்கை மற்றும் அதற்கான பதில் மனித உரிமை மாநாட்டின் போது வெளியாகவுள்ளது.
No comments:
Post a Comment