Tuesday, September 8, 2015

தாங்க முடியாத விளைவுகளை சந்திப்பீர்கள் ' ; இந்தியாவை எச்சரிக்கிறார் பாக், தளபதி!

Tuesday, September 08, 2015
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த நினைத்தால், தாங்க முடியாத அளவுக்கு பெரும் நஷ்டத்தை இந்தியா சந்திக்க நேரிடும்'' என பாக்., ராணுவ தளபதி ரஹீல் செரீப் எச்சரித்துள்ளார் .ராவல்பிண்டியில் ராணுவ தலைமையகத்தில் இந்திய - பாக்., போர் நடந்த 50 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையி்ல் :

நமது ராணுவம் முழு அளவில் தயார் நிலையி்ல் உள்ளது . எதிரிகள் நம் மீது குறுகிய எண்ணத்துடன் குறைத்து மதிப்பிட்டு, தாக்குதல் நடத்த எண்ணியிருந்தால் இதனை நாங்கள் எதிர் கொள்ள தயார் . எதையும் சந்திக்கக் கூடிய நிலையில் , நமது படையினருக்கு முழு தகுதி உண்டு. எந்த சூழலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நம் மீது யாராவது போர் தொடுக்க முற்பட்டால், எதிரிகள், தாங்க முடியாத விளைவுகைள சந்திக்க நேரிடும் . இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார் .

சில நாட்களுக்கு முன் இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் பேசுகையில்; எதிர்காலத்தில் குறுகிய கால போர்கள் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவ தளபதி செரீப் பேசியுள்ளார் .

No comments:

Post a Comment