Friday, September 25, 2015
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன்சாமிக்கு, டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை தர, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி, இதுகுறித்து, சுப்பிரமணியன்சாமியிடம் பேசியதாகவும், ஆனால், அந்த பதவியை ஏற்பதற்கு, அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது; நிபந்தனைகள் பற்றிய விவரம் தெரியவில்லை.
No comments:
Post a Comment