Friday, September 25, 2015
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டிணம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் சிவராஜ்(40) என்பவருக்கு சொந்தமான படகில் புஷ்பராஜ், சிவா ஆகியோரும், ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் பிரமானந்தன், மணிவண்ணன் ஆகியோர் என 4 பேர் மீன்படிக்க சென்றனர்.
காற்றின் வேகத்தால் திசை மாறியதால் இலங்கை எல்லைக்குள் சென்ற அவர்களை இலங்கை ராணுவத்தினர் பிடித்து சென்றனர். இதைத் தொடர்ந்து நேற்று (செப்.,24) மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் கலைமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் ஜகதாப்பட்டினம் மீனவர்களை விடுவிக்காவிட்டால் , புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment