Sunday, September 13, 2015
தேசிய அரசாங்கத்தை புறக்கணித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்
உறுப்பினர்கள் குழுவொன்று கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை கையளிக்க தயாராகின்றது.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர தயாரான மற்றும் தேசிய அரசாங்கத்தில் பதவிகளை பெறாத உறுப்பினர்கள் தற்சமயம் அந்த கடிதத்தில் கைச்சாத்திடும் செயற்பாடுகளை முன் எடுப்பதாக அதன் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன
எதிர்கட்சியில் அமர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 40க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
அவர்களது கையெழுத்துடனான கடிதம் அடுத்த நாடாளுமன்ற அமர்விற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் எதிர்கட்சியில் அமரவுள்ள செய்தியை கட்சியின் தலைவரான ஜனாதிபதிக்கு அறிவிப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment