Wednesday, September 16, 2015
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையின் கூட்டம் தொடர்பில், இந்திய பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் தாங்கள் விளக்கமளித்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு ஏற்படுமாயின், அது மனித உரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு இறுதி முடிவை கொடுப்பதோடு, அனைத்து இலங்கையர்களும் சமத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment