Wednesday, September 16, 2015
இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தற்போதைக்கு நாங்கள் கருதவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, சட்டவிரோத படுகொலைகள், பலவந்தமாக காணாமற் போகச்செய்யப்படுதல், மிகமோசமான சித்திரவதைகள், பாலியல் வல்லுறவு, சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் உட்பட பாரிய குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மனித குலம் முழுவதற்கும் கடும் கரிசனையை ஏற்படுத்தக்கூடிய விபரங்கள் இந்த அறிக்கை மூலம் வெளியாகியுள்ளன. புலம்பெயர் தமிழர்கள் உட்பட சகலசமூகத்தினரும் இந்த அறிக்கையை மறுத்தல் என்ற நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அங்கீகரித்தல் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளிற்கான சந்தர்ப்பமாக கருதவேண்டும்.என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு தரப்புக்களுக்கும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் குற்றச் செயல்களை இரண்டு தரப்பினரும் மேற்கொண்டுள்ளனர்.
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஹைபிரைட் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இந்த விசாரணைகளில் சர்வதேச நீதவான்கள் சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்பும் உள்ளடக்கப்பட வேண்டும்.
விசாரணைகளின் மூலம் பாரதூரமான குற்றச் செயல்கள் இடம்பெற்றமை உறுதியாகியுள்ளது.
பல்லின அங்கத்துவம் கொண்ட சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment