Sunday, September 06, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை
இழிவுபடுத்த புதிய அரசாங்கம் முயற்சிப்பதாக காலி மாவட்ட ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும
தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ மீது சேற்றைப் பூசி அவரை அவமானப்படுத்தும் முயற்சியாகவே மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்ட விவகாரத்தை கருத வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள விமான நிலையம் எவ்வளவு பெரிய சொத்து என்பதனை புதிய அரசாங்கம் விரைவில் புரிந்து கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மானம் பாரிய விரயம் என கூறிய பதிய அரசாங்கம் ஏன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்துவதன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கையின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை இலக்கு வைத்து புதிய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment