Tuesday, September 8, 2015

ஜனா­தி­பதி மைத்­தி­ரியை தலை­வ­ராக ஒரு­போதும் ஏற்­க­மு­டி­யாது: மஹிந்த ஆத­ரவு அணி­யினர்`!​

Tuesday, September 08, 2015
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நிந்­தித்­து­வப்­ப­டுத்தும் மஹிந்த ஆத­ரவு அணி­யினர் எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது சுயா­தீ­ன­மாக செயற்­ப­டப்­போ­வ­தாக தெரி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் தலை­வ­ராக இருக்கும் வரையில் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­படப் போவ­தில்லை எனவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.
 
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் புதிய அர­சாங்­கத்தில் தம்­மையும் ஆளும் கட்­சியில் இணைத் துக்கொண்­டுள்­ளதால் பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகிய பிர­தான இரண்டு கட்­சி­களும் ஆளும் கட்­சி­யா­கவே செயற்­ப­டு­கின்­றன. எனினும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் மஹிந்த ஆத­ரவு அணி­யாக செயற்­படும் அணி­யினர் தாம் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட விரும்­பாத நிலையில் தம்மை எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட அனு­ம­திக்கக் கோரி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் இப்­போது மஹிந்த ஆத­ரவு அணி­யினர் தாம் எதிர்­வரும் பார­ா ளு­மன்ற அமர்வின் போது பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர்.
 
எதிர்­வரும் 22ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூட­வுள்ள நிலையில் அந்த அமர்வில் தாம் பாரா­ளு­மன் றில் தனித்து செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும், எந்­த­வொரு கட்­சிக்கும் ஆத­ரவு வழங்கப்போவ­தில்லை எனவும் தெரி­வித்­துள்­ளனர். இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­விக்­கையில்,
 
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் நாம் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்­டாலும் எம்மால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இந்த அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட முடி­யாது. கட்­சியின் கொள்­கைக்கும், மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திக்கும் முர­ணான வகையில் இப்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தான உறுப்­பி­னர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். ஆகவே இதை ஒரு­போதும் எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
 
அதேபோல் கடந்த இரண்டு தேர்­தல்களின் போதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றியை தடுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எம்மால் ஒரு­போதும் தலை­வ­ராக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஆகவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் தலை­வ­ராக இருக்கும் வரையில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட மாட்டோம்.
 
அதேபோல் எதிர்­வரும் மாகா­ண­சபைத் தேர்­தலின் போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் உள்ள முக்­கிய ஆறு கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தனித்து கள­மி­றங்க தீர்­மானம் எடுத்­துள்ளோம். அதற்­கான பேச்­சு­வார்த்­தை­களை நாம் ஆரம்­பித்­துள்ளோம். எனினும் யார் எமது கூட்­டணி என்பதை இப்போது வெளியிட முடியாது. எமது கட்சியின் நலனுக்காகவும் நாட்டை பாதுகாக்கவும் இரகசியமாக செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாம் வெளிப்படையாக ஏதேனும் முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் எமது முயற்சிகளை முறியடிக்க பலர் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment