Thursday, September 3, 2015

தேசிய அரசாங்கத்தின் அமைச்சு பதவிகளை அதிகரிப்பது தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் யோசனை!

Thursday, September 03, 2015
தேசிய அரசாங்கத்தின் அமைச்சு பதவிகளை அதிகரிப்பது தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளார்.

இந்த நிலையில் அது தொடர்பில் இன்றைய தினம் விசேட விவாதம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார்.

இதன்படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 48ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் அதிகரிக்க கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment