Thursday, September 03, 2015
சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது அமிா்தலிங்கம் எதிா்க்கட்சி தலைவராக இருந்த பிறகு 2வது தடவையாக சம்பந்தனுக்கு கிடைத்துள்ளது.
8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.சபாநாயகர் இவ்வறிப்பை இன்று மேற்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 56 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் கடந்த தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் விருப்பை வெளியிட்டிருந்தன.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்சவும், அரசியலமைப்பு ரீதியாக சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமாக இருந்தால், அதனை ஏற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சியும், இரண்டாம் இடத்தை பெற்ற ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், எதிர்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தனுக்கு பிரதமராகவும் வர உரிமையுள்ளதாம்!!!
எதிர்க் கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டமை வரலாற்று சிறப்பம்சம் என்பது மட்டுமல்ல, அரசியல் ரீதியில் பிரச்சினையான ஒரு விடயமும் அல்ல என கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணம் இலங்கையின் ஒரு பகுதி என நாம் ஏற்றுக் கொள்வதாயின் அந்த பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் தலைவர் எதிர்க் கட்சியின் தலைமைப் பதவிக்கு மாத்திரமல்ல, குறிப்பிட்ட நியதிகளுடன் பிரதமராகவும் வருவதற்கு உரித்துடையவர் எனவும் கலாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment