Saturday, September 26, 2015
யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தினரை அழைத்து கோப்பாய் பொலிசார் பல மணிநேரம் தடுத்து வைத்து நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்.பல்கலைகழக கலைப்பீட சிரேஸ்ட - கனிஸ்ட மாணவர்களுக்கு இடையில் கடந்த 9ம் திகதி ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து 9 ம் திகதியும் 10ம் திகதியும் மாணவர்கள் தமக்கு இடையில் மோதிக்கொண்டனர்.
10ம் திகதி மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தின் வெளியில் வீதியில் நின்று தமக்கு இடையில் மோதிக்கொண்டனர். அதனால் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. அதனை அடுத்து மோதல் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிசார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மோதல் நடைபெற்ற இடத்திற்கு பொலிசார் சென்று இருந்தனர்.
பொலிசாரை கண்டதும் வீதியில் மோதலில் ஈடுபட்டு இருந்த மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தினுள் ஓடி விட்டனர்.
அதனை அடுத்து கோப்பாய் பொலிசார் அவ்விடத்தில் நின்றவர்களிடம் மோதல் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு இருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த பல்கலைகழக விரிவுரையாளர்கள் நால்வர் உங்களை யார் கூப்பிட்டது ? ஏன் வந்தீர்கள் ? என கேட்டுள்ளனர்.
அதையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளாது அவ்விடத்தில் இருந்து சென்று இருந்தனர்.
அந்நிலையில் கடந்த சில தினங்களாக கோப்பாய் பொலிசார் பல்கலைகழக மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாகவே இன்றைய தினம் பல்கலை கழக நிர்வாகத்தை சேர்ந்த சிலரை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பல மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர்களிடம் வாக்கு மூலங்களையும் பதிவு செய்தனர்.
அதேவேளை மோதலுக்கு காரணமான மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் இரகசியமாக மேற்கொண்டு வருகின்றார்கள் என பொலிஸ் நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment